என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வெடிகுண்டு பார்சல்
நீங்கள் தேடியது "வெடிகுண்டு பார்சல்"
நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சி நிலையத்துக்கு வந்த மர்ம பார்சலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்தனர். CNNbureauinNY #NYCNNbureauevacuated #CNNsuspiciouspackage
நியூயார்க்:
அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் அந்நாட்டின் மிகப்பிரபலமான ‘சி.என்.என்.’ செய்தி தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ளது.
டைம் வார்னர் சென்டர் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த அலுவலகத்துக்கு இன்று சந்தேகத்துக்குரிய மர்ம பார்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தங்களது செய்தி ஒளிபரப்பின்போது ஒரு அறிவிப்பை ‘சி.என்.என்.’ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் அவரசமாக வெளியேறினர்.
இதேபோல், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கும் வெடிப்பொருள் பார்சலாக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ‘சி.என்.என்.’ தொலைக்காட்சி நிலையத்துக்கு உளவுத்துறை அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்துள்ளனர். #CNNbureauinNY #NYCNNbureauevacuated #CNNsuspiciouspackage
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருள் பார்சல்களை உளவுப்படையினர் கைப்பற்றினர். #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary
நியூயார்க்:
அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
அவ்வகையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரிகளிக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருள் பார்சல்களை இடைமறித்து, கைப்பற்றியதாக அமெரிக்க உளவுப்படையினர் இன்று தெரிவித்துள்ளனர்.
அந்த பார்செல்களில் இருந்த வெடிப்பொருள் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரரும் கொடையாளருமான ஜார்ஜ் சோரோஸ் வீட்டில் கடந்த திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்ட வெடிப்பொருட்களை ஒத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X